/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
துப்புரவு பணியாளர்களுக்கு நகராட்சி தலைவர் அறிவுரை
/
துப்புரவு பணியாளர்களுக்கு நகராட்சி தலைவர் அறிவுரை
ADDED : செப் 15, 2024 02:55 AM
குமாரபாளையம்: குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில், சில மாதங்களாக நடந்த நகர்மன்ற கூட்டத்தில், பெரும்பாலான கவுன்சிலர்கள், 'தங்கள் வார்டுகளில் குப்பையை அகற்ற துாய்மை பணியாளர்கள் வருவது இல்லை' என, புகார் கூறினர்.
இந்நிலையில், நேற்று காலை, நகரில் உள்ள ஒவ்வொரு பகுதியிலும் கமிஷனர் குமரன், நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் ஆகியோர் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது, துாய்மைப்பணியாளர்களிடம், 'உங்கள் பணிகளை நீங்கள் சரியாக செய்தால் தான் நகராட்சி நிர்வாகத்-திற்கு நல்ல பெயர் கிடைக்கும். ஒவ்வொருவரும் தங்கள் பொறுப்பை உணர்ந்து துாய்மை பணிகளை செய்து, நகராட்சி நிர்-வாகத்திற்கு நற்பெயர் பெற்றுத்தர வேண்டும்' என, அறிவுரை கூறினார்.