/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாளை தேசிய குடற்புழு நீக்க முகாம் 6.72 லட்சம் பேருக்கு மாத்திரை வழங்கல்
/
நாளை தேசிய குடற்புழு நீக்க முகாம் 6.72 லட்சம் பேருக்கு மாத்திரை வழங்கல்
நாளை தேசிய குடற்புழு நீக்க முகாம் 6.72 லட்சம் பேருக்கு மாத்திரை வழங்கல்
நாளை தேசிய குடற்புழு நீக்க முகாம் 6.72 லட்சம் பேருக்கு மாத்திரை வழங்கல்
ADDED : ஆக 22, 2024 01:53 AM
நாமக்கல், ஆக. 22-
நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்ட அறிக்கை:
உலக மக்கள் தொகையில், 24 சதவீதம் பேர் மண் மூலம் பரவும் குடற்புழு தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த உலகளாவிய தொற்றுகளில், இந்தியா மட்டும் கிட்டத்தட்ட, 25 சதவீதம் பங்களிக்கிறது. குடற்புழு தொற்றினால் இரும்புச்சத்து இழப்பு, ரத்த சோகைக்கு உள்ளாகி ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு, அதனால் உடல் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் பாதிக்கப்படுகிறது.
குழந்தைகளுக்கு, 'அல்பெண்டசோல்' மருந்து உட்கொள்வதால் உடல் வளர்ச்சி அதிகரிப்பு, குழந்தையின் எடை அதிகரிப்பு, பிற நோய்த்தொற்றுகளுக்கு எதிர்ப்பு, மேம்படுத்தப்பட்ட அறிவாற்றல், மன மற்றும் உடல் வளர்ச்சியுடன் குழந்தைகளின் சிறந்த கற்கும் திறன் மற்றும் பள்ளி வருகையை அதிகரித்து, பள்ளிகளில் சுறுசுறுப்பாக இருத்தல் போன்ற நன்மைகள் ஏற்படுகிறது. பொது சுகாதாரத்துறை சார்பில், தேசிய குடற்புழு நீக்க முகாம், தமிழகம் முழுதும் நாளை நடக்கிறது. விடுபட்ட குழந்தைகளுக்கு, வரும், 30ல் வழங்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில், இம்முகாமிற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
முகாமில், ஒன்று முதல், 19 வயது வரையிலான சிறுவர்கள், கருவுறாத மற்றும் பாலுாட்டாத, 20 முதல், 30 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு, குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படும்.
நாமக்கல் மாவட்டத்தில், 1 - -19 வயது வரை உள்ள, 5 லட்சத்து, 18,438 குழந்தைகளுக்கும், 20 - -30 வயது வரை உள்ள, ஒரு லட்சத்து, 53,830 பெண்களுக்கும் என, மொத்தம், 6 லட்சத்து, 72,268 பேருக்கு, 'அல்பெண்டசோல்' மாத்திரை வழங்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.