/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தேசிய மல்யுத்த போட்டி தமிழக வீரர்கள் சாதனை
/
தேசிய மல்யுத்த போட்டி தமிழக வீரர்கள் சாதனை
ADDED : ஆக 08, 2024 01:34 AM
குமாரபாளையம், 8-
சட்டீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில், 46வது தேசிய அளவிலான மல்யுத்த போட்டி, கடந்த, 1 முதல் 5 வரை நடந்தது.
இதில், 20க்கும் மேற்பட்ட மாநிலங்களை சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனையர் பங்கேற்றனர். அதில் தமிழகத்தை சேர்ந்த, 30 பேர் கலந்துகொண்டனர். அவர்கள், ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தில், ஐந்தாவது இடத்தை பிடித்தும், தமிழகத்திற்கு, 12 பதக்கங்கள் பெற்றும் சாதனை படைத்தனர். அதில், தமிழக காவல்துறையை சேர்ந்த பூவிழி, ஆண்ட்ரூஸ், தங்க பதக்கம், எஸ்.ஆர்.எம்., பல்கலையை சேர்ந்த ஸ்ரீதர், வேலுார் மாவட்டத்தை சேர்ந்த ராஜஸ்ரீ, வெள்ளி பதக்கம், மேலும், புஷ்பராஜ், கோகுல்ராஜ், அரவிந்த், வில்வநாதன், ஆகியோர் வெண்கல பதக்கத்தையும் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். தேசிய நடுவராக, கரூர் மாவட்டத்தை சேர்ந்த தேவிகா பணியாற்றினார். இவர்களை, தமிழக கை மல்யுத்த சங்க தலைவர் பாலாஜி தங்கவேல், பொதுச்செயலாளர் இளங்கோவன் உள்பட பலர் பாராட்டினர்.