/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வெள்ளம் வடிந்ததால் இயல்புநிலை திரும்பியது
/
வெள்ளம் வடிந்ததால் இயல்புநிலை திரும்பியது
ADDED : ஆக 06, 2024 01:54 AM
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் பகுதியில் நாட்டாகவுண்டம்புதுார், ஜனதா நகர், ஆவாரங்காடு, பாவடித்தெரு, சந்தைப்பேட்டை, சத்யா நகர் உள்ளிட்ட பகுதிகள், ஆற்றோரத்தில் உள்ளன. கடந்த வாரம், மேட்டூர் அணை நிரம்பியதால், அணைக்கு வரும் தண்ணீர் முழுதும் ஆற்றில் வெளியேற்றப்பட்டது. இதனால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பள்ளிப்பாளையம் ஆற்றோர பகுதியில் உள்ள, 139 வீடுகளில் தண்ணீர் புகுந்தது.
அங்கு வசித்த மக்கள், தங்களுக்கு தேவையான உடமைகள், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை மற்றும் முக்கிய ஆவணங்களை எடுத்துக்கொண்டு சந்தைப்பேட்டை, ஆவாரங்காடு, நாட்டாகவுண்டம்புதுார், அம்மன் கோவில் பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த முகாம்களில், 322 பேர் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர்.
அவர்களுக்கு, நகராட்சி சார்பில் மூன்று வேளை உணவு வழங்கப்பட்டது. கடந்த, 4 முதல் ஆற்றில் தண்ணீர் வரத்து படிப்படியாக குறைந்தது. இதனால் ஆற்றோர பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்த தண்ணீர் வடிந்தது. இதையடுத்து, நான்கு முகாமில் தங்கியிருந்த, 322 பேர் நேற்று காலை அவர்களது வீட்டிற்கு சென்றனர். இதனால் இயல்பு நிலை திரும்பியது.