ADDED : ஜூலை 17, 2024 09:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராசிபுரம், : ராசிபுரம் ஒன்றியம், முத்துக்காளிப்பட்டி கிரா-மத்தில், 'டான்சிடா' விதை பெருக்க திட்டத்தில் பாசிப்பயறு வம்பன்-5 என்ற ரகத்தை, 2 ஏக்கர் நிலத்தில் விதைத்துள்ளனர்.
ஆதார விதை பண்-ணையான இதை, விதைச்சான்று உதவி இயக்-குனர் சித்திரைச் செல்வி, நேற்று வயல்களில் ஆய்வு செய்தார். அப்போது, வயல்களில் களவன் களைகள் மற்றும் பூச்சி நோய் தாக்குதல் உள்ள-னவா என, பார்வையிட்டார். மேலும், செடிகள் சரியான பருவத்திற்கு ஏற்ப வளர்ந்துள்ளனவா, பாசிப்பயறு காய்கள் விளைச்சல் ஆகியவை குறித்தும் ஆய்வு செய்தார். உதவி விதை அலு-வலர் திருநாவுக்கரசு உள்ளிட்ட வேளாண் அலுவ-லர்கள் உடனிருந்தனர்.