/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
காங்., சார்பில் கேரளா மாநிலம் வயநாட்டுக்கு ரூ.2 லட்சம் மதிப்பு முட்டை அனுப்பி வைப்பு

ADDED : ஆக 14, 2024 01:55 AM
நாமக்கல்: கேரளா மாநிலம், வயநாட்டில் பாதிக்கப்பட்டோருக்கு, நாமக்-கல்லில் இருந்து, 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள முட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டன.
நீலகிரி மாவட்டம், பந்தலுாரை ஒட்டியுள்ள கேரளத்தின் வயநாடு மாவட்டம், இங்கு, மலைகளுக்கு இடையே உள்ள முண்டக்கை, சூரல்மலை பகுதிகளில், ஜூலை, 30ல், கனமழை காரணமாக, காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்தது. அதன் காரணமாக நிலச்-சரிவு ஏற்பட்டது. ஆற்றின் கரைகள் உடைந்து வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. அதில், ஏராளமானோர் பலியாகினர். வெள்-ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அரசு, அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகள் நிதி உதவி வழங்கி வருகின்றனர்.
அதன்படி, தமிழக காங்., சார்பில், நாமக்கல் மாவட்டத்தில் இருந்து, இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள, ஏற்றுமதி தரம் வாய்ந்த முட்டைகள், வயநாட்டுக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நேற்று, நாமக்கல்லில் நடந்தது. காங்., செய்தி தொடர்பாளர் செந்தில் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட தலைவர் சித்திக், நாமக்கல் மாநகராட்சி மாமன்ற தலைவர் கலாநிதி, துணைத்த-லைவர் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
எம்.பி., ராஜேஸ்குமார், கொடியசைத்து, வாகனத்தை அனுப்பி வைத்தார். நாமக்கல் கொங்கு நாட்டு வேளாளர் சங்க தலைவர் வெங்கடாசலம், கால்நடை விஞ்ஞானி நெல்சன், நகர தலைவர் மோகன், தி.மு.க., நகர செயலாளர்கள் ஆனந்த், சிவக்குமார் உள்-பட பலர் பங்கேற்றனர்.