/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
போக்குவரத்து ஓய்வூதிய நல மீட்பு சங்க கிளை அலுவலகம் திறப்பு
/
போக்குவரத்து ஓய்வூதிய நல மீட்பு சங்க கிளை அலுவலகம் திறப்பு
போக்குவரத்து ஓய்வூதிய நல மீட்பு சங்க கிளை அலுவலகம் திறப்பு
போக்குவரத்து ஓய்வூதிய நல மீட்பு சங்க கிளை அலுவலகம் திறப்பு
ADDED : செப் 06, 2024 01:43 AM
நாமக்கல், செப். 6-
நாமக்கல்லில், அரசு போக்குவரத்து ஓய்வூதிய நல மீட்பு சங்கம் சார்பில், கிளை அலுவலக திறப்பு விழா நடந்தது.
நாமக்கல், அரசு போக்குவரத்து பணிமனை எதிரே நடந்த நிகழ்ச்சிக்கு கிளை சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். சேலம் மண்டல தலைவர் தேவதாஸ், செயலாளர் விஜயகுமார், பொருளாளர் நுாருல்அமீன் ஆகியோர், கிளை அலுவலகத்தை திறந்து வைத்தனர்.
தொடர்ந்து நடந்த கூட்டத்தில், உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. மேலும், பஞ்சபடி உயர்வை விரைவுப்படுத்தி தீர்ப்பு வழங்க கோரி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஓய்வூதியர்கள் பதிவு தபாலில் கடிதம் அனுப்பினர்.
கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம், செயலாளர் குழந்தைவேல், பொருளாளர் அமிர்தலிங்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.