/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ப.வேலுாரில் போலீசாருக்கு யோகா, தியான பயிற்சி முகாம்
/
ப.வேலுாரில் போலீசாருக்கு யோகா, தியான பயிற்சி முகாம்
ப.வேலுாரில் போலீசாருக்கு யோகா, தியான பயிற்சி முகாம்
ப.வேலுாரில் போலீசாருக்கு யோகா, தியான பயிற்சி முகாம்
ADDED : மே 05, 2024 02:27 AM
ப.வேலுார்:ப.வேலுார்
போலீஸ் நிலைய சப்-டிவிஷனுக்கு உட்பட்ட ப.வேலுார், ஜேடர்பாளையம்,
நல்லுார், பரமத்தி, வேலகவுண்டம்பட்டி, ப.வேலுார் மகளிர் போலீஸ்
ஸ்டேஷன் மற்றும் போக்குவரத்து போலீஸ் நிலையம் உட்பட, 7 போலீஸ்
ஸ்டேஷன்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பணிபுரியும் இன்ஸ்பெக்டர்,
எஸ்.ஐ., மற்றும் போலீஸ் உள்ளிட்ட, 100-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி
வருகின்றனர். இவர்கள், 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டு வருவதாலும்,
அதிக பணிச்சுமை மற்றும் மன உளைச்சல் காரணமாக மனதளவிலும்,
உடலளவிலும் ஏற்படும் சோர்வை போக்கும் வகையில், நேற்று காலை ப.வேலுார்
தனியார் பள்ளி மைதானத்தில், சிறப்பு யோகா, தியான பயிற்சி வகுப்பு,
ப.வேலுார் டி.எஸ்.பி., சங்கீதா தலைமையில் நடந்தது.
இப்பயிற்சியை,
ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டரும், யோகா பயிற்றுனருமான நாமக்கல்லை
சேர்ந்த ஆறுமுகம் பயிற்சி அளித்தார். இதில், 7 போலீஸ் ஸ்டேஷன்களில்
இருந்து, 70-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இப்பயிற்சி மூலம் மன
அழுத்தம், பணிச்சுமை, உடல் சோர்வு குறைந்து, துாக்கமின்மை
போன்றவற்றில் இருந்து புத்துணர்வு பெற முடியும் என, யோகா
பயிற்சியாளர் ஆறுமுகம் தெரிவித்தார்.