/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'விதிமுறை மீறி இலவச வண்டல் மண் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும்'
/
'விதிமுறை மீறி இலவச வண்டல் மண் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும்'
'விதிமுறை மீறி இலவச வண்டல் மண் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும்'
'விதிமுறை மீறி இலவச வண்டல் மண் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும்'
ADDED : ஆக 06, 2024 01:55 AM
நாமக்கல், 'விதிமுறைகளை மீறி இலவச வண்டல் மண்ணை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, நாமக்கல் கலெக்டர் உமா எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
'தமிழகத்தில் உள்ள விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில், நீர்நிலைகளில் படிந்துள்ள வண்டல் மண்ணை இலவசமாக எடுத்துக்கொள்ளலாம்' என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதையொட்டி, இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்து அனுமதி பெற்றுக்கொள்ள அரசு உத்தரவிட்டது.
அதை தொடர்ந்து, நாமக்கல் மாவட்டத்தில் நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையினரிடமிருந்து பரிந்துரை செய்யப்பட்ட, 116 நீர்நிலைகளில் இருந்து மண் எடுத்துச்செல்லலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. தற்போது, விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தால் சம்பந்தப்பட்ட தாசில்தார் மூலம் உத்தரவு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் வண்டல் மண்ணை தாங்கள் கோரியுள்ள நிலத்தில் மட்டுமே கொட்டப்பட வேண்டும் என, அறிவுறுத்தப்படுகிறது. மேலும், குறிப்பிட்ட விவசாய மற்றும் மண்பாண்ட பயன்பாட்டிற்கு பயன்படுத்தாமல், வியாபார நோக்கில் பயன்படுத்துவது அல்லது விண்ணப்பிக்கப்பட்ட நிலத்தை தவிர வேறு இடத்தில் கொட்டப்படுவது குறித்து ஆய்வு செய்யப்படும்.
அப்போது கண்டறியப்பட்டால், இலவசமாக மண் எடுத்துச் செல்ல வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படும். மேலும், அரசு விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு, அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.