/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
-மாநகராட்சி இடத்தில் 'மதுரை வீரன்' கோவில் ஆக்கிரமிப்புகளை அகற்றி எச்சரிக்கை பேனர்

ADDED : செப் 24, 2024 03:04 AM
நாமக்கல்: நாமக்கல் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில், 'மதுரை வீரன்' சுவாமி கோவில் கட்டி வழிபட சிலர் முயற்சி மேற்கொண்-டனர். ஆனால், அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள், எச்சரிக்கை பேனர் வைத்து சென்றனர்.
நாமக்கல் அடுத்த கொண்டிசெட்டிப்பட்டி, கணபதி நகரில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்ப-குதியில், மாநகராட்சிக்கு சொந்தமான, 1,821 சதுர மீட்டர் பரப்ப-ளவில் காலி நிலம் உள்ளது. இந்த காலி இடத்தில், அப்பகுதியை சேர்ந்த சிலர், 'மதுரை வீரன்' சுவாமி கோவில் என்ற பெயரில், கற்-களை வைத்து சில நாட்களாக தினசரி பூஜை செய்து வந்தனர். இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் சென்றது.இதையடுத்து, நேற்று சம்பந்தப்பட்ட இடத்திற்கு, நகரமைப்பு ஆய்வாளர் ராஜ்குமார் தலைமையிலான அலுவலர்கள், போலீசார், துாய்மை பணியாளர்கள் சென்றனர். தொடர்ந்து மாநகராட்சி இடத்தில் ஆக்கிரமித்திருந்த, 4 கற்களை
தோண்டி எடுத்து பறி-முதல் செய்தனர். மேலும், அப்பகுதியை துாய்மை செய்து, 'மாநக-ராட்சிக்கு சொந்தமான இடம்; ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது' என எச்சரிக்கை பேனர் வைத்து சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்-டது.