/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டி
/
மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டி
ADDED : ஆக 26, 2024 02:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை யூனியன், முள்ளுக்குறிச்சி முன்னாள் கபடி வீரர்கள் சார்பில், 3ம் ஆண்டாக மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டி, நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. சேலம், திருச்சி, ஈரோடு, கரூர், சென்னை உள்ளிட்ட தமிழக மாவட்டங்-களில் இருந்து, 40க்கும் மேற்பட்ட கபடி அணிகள் பங்கேற்றன. முதல் சுற்று போட்டி நடந்து முடிந்த நிலையில், இரண்டாம் சுற்று, காலிறுதி, அரையிறுதி, இறுதி போட்டிகள், நேற்று இரவு தொடங்கின.
போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு, மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் நித்யா, சுவாமி மெட்ரிக்பள்ளி நிர்வாகி பூர்ணிமா உள்ளிட்டோர் பரிசுகளை வழங்குகின்றனர்.

