/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பள்ளிப்பாளையத்தில் வெளுத்து வாங்கிய மழை
/
பள்ளிப்பாளையத்தில் வெளுத்து வாங்கிய மழை
ADDED : மார் 12, 2025 08:07 AM
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் சுற்று வட்டாரத்தில், நேற்று மாலை, 4:30 மணிக்கு மழை பெய்ய துவங்கியது தொடர்ந்து, அரை மணி நேரம் வெளுத்து கட்டிய மழையால், சாலையில் மழைநீர் ஆறாக ஓடியது. காவிரி பகுதியில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில், குளம்போல் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினர். பின், நெடுஞ்சாலைத்துறை பணி-யாளர்கள் விரைந்து வந்து, மோட்டார் வைத்து மழைநீரை உறிஞ்சி அகற்றினர்.
இதேபோல், ராசிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிக-ளான புதுப்பாளையம், பட்டணம், நாமகிரிப்பேட்டை, சீராப்-பள்ளி, காக்காவேரி, புதுப்பட்டி, மெட்டாலா, மங்களபுரம், குரு-சாமி பாளையம், வெண்ணந்துார், மின்னக்கல், ஓ.சவுதாபுரம், அத்-தனுார், ஆட்டையாம்பட்டி பிரிவு சாலை, ப.வேலுார், பரமத்தி, பொத்தனுார், கபிலர்மலை, பாண்டமங்கலம் பகுதியில் பெய்த மழையால், வறண்டு கிடந்த பூமி குளிர்ச்சியடைந்தது. வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், நேற்று மழை பெய்ததால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.