/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வழிபாட்டு உரிமையை தடுப்பதை கண்டித்து த.தே.க., ஆர்ப்பாட்டம்
/
வழிபாட்டு உரிமையை தடுப்பதை கண்டித்து த.தே.க., ஆர்ப்பாட்டம்
வழிபாட்டு உரிமையை தடுப்பதை கண்டித்து த.தே.க., ஆர்ப்பாட்டம்
வழிபாட்டு உரிமையை தடுப்பதை கண்டித்து த.தே.க., ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 06, 2024 02:33 AM
நாமக்கல், சேந்தமங்கலம் பெரிய மாரியம்மன் கோவிலில், மாவிலியர் சமுதாயத்திற்கு வழங்கப்பட்டு வரும் உரிமையை, சிலர் மறுக்கப்படுவதை கண்டித்து, நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன், தமிழர் தேசம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நிறுவனர் தலைவர் செல்வகுமார் தலைமை வகித்தார்.
அதில், சேந்தமங்கலத்தில் உள்ள பெரிய மாரியம்மன் கோவிலில் பாரம்பரியமாக மாவிலியர் (முத்தரையர்) சமுதாயத்திற்கு வழங்கப்பட்டு வரும் வழிபாட்டு உரிமைகளை மீட்டுத்தர ஹிந்து சமய அறநிலையத்துறையை வலியுறுத்தியும்; திருவிழாவில் கலந்து கொள்ளவிடாமல் ஜாதி ரீதியாக தடுத்துவரும் நபர்கள் மீது
நடவடிக்கை எடுக்க கோரியும் கோசம் எழுப்பப்பட்டது. மாநில பொதுச்செயலாளர் ராஜேஷ், மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் நதியா உள்பட பலர் பங்கேற்றனர்.