/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வானவில் மன்ற செயல்பாடு நடப்பாண்டில் துவக்கம்
/
வானவில் மன்ற செயல்பாடு நடப்பாண்டில் துவக்கம்
ADDED : ஆக 06, 2024 01:56 AM
நாமக்கல், நாமக்கல் மாவட்ட திட்ட அலுவலகத்தில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில், 6ம் முதல், -8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு, வானவில் மன்ற செயல்பாடுகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை வகித்தார். உதவி திட்ட அலுவலர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார்.
இதில் பங்கேற்ற, 16 கருத்தாளர்களுக்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிந்துஜா, பரிக்க்ஷான் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் அறிவரசன், டி.என்.எஸ்.எப்., அமைப்பின் மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளர் ராஜா ஆகியோர் வழிகாட்டுதல் பயிற்சி வழங்கினர்.
பயிற்சி பெற்ற கருத்தாளர்கள், பள்ளிகளுக்கு சென்று மாணவ, மாணவியர்களுக்கு செயல்பாடுகளை செய்து காட்டி அறிவியல் மற்றும் கணிதத்தில் மாணவர்களின் ஆர்வத்தை துாண்டி, அவர்களின் சிந்திக்கும் திறன், உற்று நோக்குதல் திறன், கேள்வி கேட்கும் திறன் ஆகியவற்றை வளர்த்தெடுத்து புரிதலுடன் படிக்க ஊக்கப்படுத்துவர்.