ADDED : ஆக 14, 2024 02:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம்:குமாரபாளையம் அருகே, ஓலப்பாளையத்தை சேர்ந்தவர் செல்ல-துரை, 44; விசைத்தறி தொழிலாளி. இவர், 'ஸ்பிளண்டர் புரோ' டூவீலரில், நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு, சேலம் - கோவை புறவழிச்சாலை, தனியார் பொறியியல் கல்லுாரி எதிரே உள்ள ஓட்டலுக்கு சென்றார்.
மீண்டும் திரும்பி வந்து கொண்டிருந்தபோது, எதிர்மேடு பிள்-ளையார் கோவில் அருகே, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், செல்லதுரை துாக்கி வீசப்பட்டு சம்பவ இடத்தி-லேயே உயிரிழந்தார். குமாரபாளையம் போலீசார் விசாரிக்கின்-றனர்.