நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல்: எருமப்பட்டியில், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பில், சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் மற்றும் கல்வி உதவித் தொகை வழங்கும் விழா நடந்தது.கட்சித் தலைமை ஜெனிபர் அலி தலைமை வகித்தார்.
முகமது பாரூக் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், கட்சியின் செயல்பாடு உள்ளிட்டவை குறித்து பேசப்பட்டது. தொடர்ந்து பள்ளி செல்லும் குழந்தைகள், 50 பேருக்கு இலவச நோட்டுப் புத்தகம் வழங்கப்பட்டது.மாவட்ட செயலாளர் முகமது பங்கேற்று பேசினார். மாவட்ட செயலாளர் பாஷா, மாவட்ட பொருளாளர் முகமது, கட்சயின் மாநில துணைச் செயலாளர் சாதிக் உப்பட பலர் பங்கேற்றனர்.