ADDED : மார் 10, 2024 02:36 AM
அ நிறம் | அளவு
குமாரபாளையம்:குமாரபாளையம் அருகே, வீரமாத்தியம்மன் கோவிலில் முப்பூசை திருவிழா நடந்தது.குமாரபாளையம் அருகே, வீரமாத்தியம்மன், வீரகாரன், ஐயனாரப்பன், கன்னிமார், எதிரடி வீரன், கருப்பு சாமி தெய்வங்களுக்கு முப்பூசை திருவிழா, கடந்த, 1ல், 108 சங்கு பூஜையுடன் துவங்கியது.
சுவாமிகளுக்கு மஞ்சள் முடிப்பு கட்டுதல், கொடியேற்றம், 7ல் காவிரி ஆற்றிலிருந்து பம்பை வாத்தியங்களுடன் தீர்த்தக்குட ஊர்வலம், முப்பாடு அழைத்தல் நடந்தது. 8ல் வீரமாத்தியம்மன், வீரகாரன், ஐயனாரப்பன், கன்னிமார், எதிரடி வீரன், கருப்புசாமி தெய்வங்களுக்கு முப்பூசை திருவிழா நடந்தது. இதில், சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.
