ADDED : மே 08, 2025 01:56 AM
அ நிறம் | அளவு
சேந்தமங்கலம், சேந்தமங்கலம் யூனியன், பொட்டணத்தில் கிழக்கு மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை மாத திருவிழாவையொட்டி, வரும், 20ல் மாவிளக்கு பூஜை, 21ல் பூமிதி விழா நடக்கிறது.
இதற்காக, நேற்று பூச்சாட்டு விழா நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, தீர்த்தக்கூடம் எடுத்து வந்து மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.
