ADDED : செப் 07, 2025 12:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேந்தமங்கலம், சேந்தமங்கலம் அடுத்துள்ள குப்பநாயக்கனுார், பொன்னம்மா புதுாரில் அமைந்துள்ள பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, நேற்று காலை தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. முன்னதாக, கடந்த வாரம் கும்பாபிஷேக விழாவிற்காக முகூர்த்த கால் நடப்பட்டது.
நேற்று முன்தினம் காலை, 9:00 மணிக்கு காந்திபுரத்தில் இருந்து மேளதாளம் முழங்க தீர்த்தக்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்தில் சிலம்பாட்ட மாணவர்கள், சிலம்பம் சுற்றிக்கொண்டு ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.தொடர்ந்து, யாகசாலை அமைத்து யாக வேள்வி பூஜை நடந்தது. குப்பநாயக்கனுார் பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.