ADDED : மார் 07, 2026 04:20 AM
அ நிறம் | அளவு
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம்
பகுதியில், 24 மனை தெலுங்கு செட்டியார் சமூகத்திற்கு பாத்தியப்பட்ட
ஓம் காளியம்மன் கோவில் திருவிழா, பூச்சாட்டுதலுடன், கடந்த, 26ல்
துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, நேற்று கன்னிமார் சுவாமி
தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது.
இதில், ஏழு குழந்தைகளை
தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு மஞ்சள் புத்தாடை, மாலைகள் அணிவித்து,
காவிரி ஆற்றில் இருந்து புனித தீர்த்தம் எடுத்து வரப்பட்டு, மேல தாளம்
முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு அழைத்து வரப்பட்டனர். பின், சுவாமிக்கு
சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை, அபிஷேகம், ஆராதனை
நடந்தது.
