தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ விடையாற்றி உற்சவம்

விடையாற்றி உற்சவம்

விடையாற்றி உற்சவம்


ADDED : மார் 08, 2026 06:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 08, 2026 06:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேந்தமங்கலம்:சேந்தமங்கலம் லட்சுமி நாராயண பெருமாள் மற்றும் சோமேஸ்-வரர் கோவிலில், மாசி மக தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் விதவிதமான அலங்காரத்தில் மேற்கு கடைவீதியில் அமைந்துள்ள கேளிக்கை மண்டபத்தில் பெருமாள் மற்றும் சோமேஸ்வரர் எழுந்தருளி பக்-தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து, பெருமாள் மற்றும் சோமேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. அதையொட்டி, குதிரை தேர் ஊர்வலம் நடந்தது. கடந்த, 2ல் பெருமாள் தேரோட்டம், 4ல் சோமேஸ்வரர் தேரோட்டம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு வெள்ளி பல்லக்கில் வீதியுலா நடந்தது.

மாசி மக தேர் திருவிழாவின் கடைசி நாளான, நேற்று காலை, 10:00 மணிக்கு லட்சுமி நாராயண பெருமாளுக்கும், சோமேஸ்வ-ரருக்கும் அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. நேற்று இரவு, 8:00 மணிக்கு கோவில் உட்பிரகாரத்தில் மேளதாளம் முழங்க, 3 முறை சுற்றி வந்து விடையாற்றி உற்-சவம் நடந்தது. அதேபோல் சோமேஸ்வரர் கோவிலிலும் சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டு, விடையாற்றி உற்சவம் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us