ADDED : மார் 29, 2026 02:20 AM
அ நிறம் | அளவு
நாமக்கல்: நாமக்கல் அடுத்த வேட்டாம்பாடியை சேர்ந்தவர் பாலு மகன் கோபிசங்கர், 22; டிரைவர். மது குடிக்கும் பழக்கம் இருந்ததால், சேலம் மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று முன்தினம் இரவு, வழக்கம்போல் வீட்டின் மாடியில் துாங்க சென்றார். அதனால், அவரது பெற்றோர் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டனர். நேற்று காலை, 9:00 மணிக்கு வீடு திரும்பிய பெற்றோர், வீடு உள்புறமாக தாழிடப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டனர்.
ஜன்னலில் எட்டி பார்த்தபோது, கோபிசங்கர், துாக்கில் தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவரை மீட்டு, நாமக்கல் அரசு கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், கோபிசங்கர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். நாமக்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.
