ADDED : ஏப் 08, 2026 06:45 AM
அ நிறம் | அளவு
8ராசிபுரம், நாமக்கல் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், வெப்ப அலை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது, அதன்படி, ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலை கல்லுாரியில், தாவரவியல் துறை மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் இணைந்து, தமிழ்நாடு வெப்ப அலை செயல் திட்டம் மற்றும் காலநிலை மாற்ற இயக்கம் சார்பாக, நேற்று முன்தினம் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
கல்லுாரி முதல்வர் யூசுப் கான் தலைமை வகித்தார். தாவரவியல் அரசியல் அறிவியல் துறை தலைவரும் பொறுப்பு முதல்வருமான சிவக்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் யூசுப்கான், ''மரம் ஒரு வரம், மரம் இல்லையேல் மழை இல்லை, மழை இல்லையேல் வளம் இல்லை, வளம் இல்லையேல் வாழ்வு இல்லை,'' என்றார். தொடர்ந்து கல்லுாரி மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.
