ADDED : ஏப் 19, 2026 06:02 AM
சேந்தமங்கலம் :: சேந்தமங்கலம் அருகே, ராமநாதபுரம் புதுார் கிராமத்தில், சதீஷ்குமார் என்பவர் பைக் மெக்கானிக் ஷாப் வைத்துள்ளார். அவருடைய கடைக்கு, நேற்று முன்தினம் காலை, காரவள்ளியை சேர்ந்த திவாகர் என்பவர், தன்னுடைய ஸ்பிளண்டர் டூவீலரை சர்வீஸ் செய்ய, மெக்கானிக் ஷாப்பில் விட்டுள்ளார். சதீஸ்குமார் வழக்கம்போல் வேலைகளை முடித்துவிட்டு, இரவு, 9:00 மணிக்கு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.
மறுநாள் காலை, 9:00 மணிக்கு சதீஷ்குமார், மெக்கானிக் ஷாப்புக்கு வந்து பார்த்த போது, திவாகரின் டூவீலர் காணாமல் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து, சேந்தமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தார். போலீசார், 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்ததில், நள்ளிரவு, 2:00 மணிக்கு வந்த, மூன்று வாலிபர்கள் டூவீலரை திருடி சென்றது தெரியவந்தது. டூவீலர் திருடி சென்ற வாலிபர்களை தேடி வருகின்றனர்.
