ADDED : மே 18, 2026 01:21 AM

அ நிறம் | அளவு
சேந்தமங்கலம்:வைகாசி கிருத்திகையையொட்டி, சேந்தமங்கலம் சுற்று வட்டாரத்தில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை, வழிபாடு நடந்தது.
முருகனுக்கு உகந்த தினமான, வைகாசி கிருத்திகையையொட்டி, சேந்தமங்கலம் சுற்று வட்டாரத்தில் உள்ள தத்தகிரி முருகன் கோவில், அக்ரஹாரம் பால தண்டாயுதபாணி கோவில், சவுந்திரவள்ளி அம்பாள் சமேத சோமேஸ்வரர் கோவிலில் உள்ள சுப்ரமணியர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு, நேற்று வாசனை திரவியங்கள் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்று வட்டாரத்தில் உள்ள பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு முருகனை தரிசனம் செய்தனர்.
