ADDED : மே 18, 2026 01:27 AM

அ நிறம் | அளவு
சேந்தமங்கலம்:ஆண்டுதோறும் ஏப்., மே மாதங்களில், 'சரக்கொன்றை' மலர்கள் சீசன் தொடங்கி பூத்துக் குலுங்குவது வழக்கம்.
தற்போது,
தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.
அதேபோல், நாமக்கல் மாவட்டத்திலும் அனல் காற்று வீசி வருகிறது. இந்த
கோடை காலங்களில் அனைத்து மரங்களிலும் இலைகள் உதிர்ந்து காணப்படும்.
ஆனால், 'சரக்கொன்றை' மரங்களில் மட்டுமே பூக்கள் பூக்கும். நாமக்கல்
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், 'சரக்கொன்றை' மலர்கள் பூத்து
குலுங்குகின்றன.
குறிப்பாக பச்சை பசேல் என காட்சியளிக்கும்
இலைகளுக்கு இடையில், மஞ்சள் நிறத்தில் பூத்து குலுங்கும் கொன்றை
மலர்கள், கண்ணை கவரும் வகையில் உள்ளன.
