ADDED : மே 21, 2026 05:37 AM
அ நிறம் | அளவு
பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம் அருகே, ஜீவாசெட் பகுதியில் தனியார் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளியில், நேற்று முன்தினம் ஆய்வு செய்த கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, மாணவர் சேர்க்கைக்கு தடை விதித்தனர்.
இதுகுறித்த அறிக்கை கலெக்டருக்கு அனுப்பப்பட்டது. இதனை தொடர்ந்து, கலெக்டரின் உத்தரவுப்படி, மாவட்ட கல்வி அலுவலர், இந்த தனியார் பள்ளி செயல்பட தடை விதித்தார். இதுகுறித்த அறிவிப்பு, பள்ளி முன் அறிவிப்பாக வைக்கப்பட்டுள்ளது.
