ADDED : ஜூலை 15, 2026 05:32 AM
அ நிறம் | அளவு
எருமப்பட்டி:தமிழ்நாடு விவசாய சங்க, எருமப்பட்டி ஒன்றியம் சார்பில், சிவநாய்க்கன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கொடுத்த பயிர் கடன்களை, தமிழக அரசு முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும், கூட்டுறவு வேளாண்மை சங்கங்களில், பயிர் கடன் முடியும் தருவாயில் உள்ள விவசாயிகளிடம், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் பயிர்கடனை உடனடியாக கட்ட நிர்பந்தம் செய்வதை நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
