/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
100 டிகிரி தாண்டும் வெப்பம்வானிலை மையம் எச்சரிக்கை
/
100 டிகிரி தாண்டும் வெப்பம்வானிலை மையம் எச்சரிக்கை
100 டிகிரி தாண்டும் வெப்பம்வானிலை மையம் எச்சரிக்கை
100 டிகிரி தாண்டும் வெப்பம்வானிலை மையம் எச்சரிக்கை
ADDED : மார் 08, 2025 01:26 AM
100 டிகிரி தாண்டும் வெப்பம்வானிலை மையம் எச்சரிக்கை
நாமக்கல்:நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லுாரியில் இயங்கி வரும், வேளாண் வானிலை ஆலோசனை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
நாமக்கல் மாவட்டத்தில், இன்று முதல், 12 வரை, ஐந்து நாட்களுக்கு பகல் நேர அதிகபட்ச வெப்ப நிலை, 100.4 டிகிரி பாரன்ஹீட்டாக இருக்கும். மழைக்கான வாய்ப்பு இல்லை. 11ல், 4 மி.மீ., 12ல், 36 மி.மீ., மழை பெய்ய வாய்ப்புள்ளது. வானம் தெளிவாக காணப்படும்.
காற்றின் ஈரப்பதம், 26 முதல், 76 சதவீதம் வரை இருக்கும். மேற்கு, கிழக்கு, வடகிழக்கு திசையில் இருந்து மணிக்கு, 6 கி.மீ., முதல் 14 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும்.
பகல்நேர வெப்பம் அதிகரித்து வருவதால், பண்ணைகளில் கோடைகால பராமரிப்பு முறைகளை கையாள துவங்க வேண்டும். கால்நடைகளில் பால் உற்பத்தி மற்றும் எடை குறையாமல் இருக்க, பசுந்தீவனம் மற்றும் அடர்தீவனம் அதிகம் அளிக்க வேண்டும். தேவையான அளவு தண்ணீர் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.