/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பத்தாம் வகுப்பில் தோல்வி சிறப்பு பயிற்சி வகுப்பு துவக்கம்
/
பத்தாம் வகுப்பில் தோல்வி சிறப்பு பயிற்சி வகுப்பு துவக்கம்
பத்தாம் வகுப்பில் தோல்வி சிறப்பு பயிற்சி வகுப்பு துவக்கம்
பத்தாம் வகுப்பில் தோல்வி சிறப்பு பயிற்சி வகுப்பு துவக்கம்
ADDED : மே 18, 2024 01:13 AM
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, 298 அரசு, தனியார் பள்ளிகளில், 10,147 மாணவர்கள், 9,612 மாணவியர் என, மொத்தம், 19,759 பேர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினர். இதில், 9,318 மாணவர்கள், 9,159 மாணவியர் என, 18,477 பேர் தேர்ச்சி பெற்றனர். 1,282 பேர் தோல்வியடைந்தனர்.
இதில், 163 அரசு பள்ளிகளை சேர்ந்த, 11,626 பேர் தேர்வு எழுதினர். இதில், 10,563 பேர் தேர்ச்சி பெற்றனர். 1,063 பேர் தோல்வியடைந்தனர். பொதுத்தேர்வில் ஓரிரு பாடங்களில் தோல்வியுற்ற, தேர்வுக்கு வர இயலாத மாணவ, மாணவியர் மீண்டும் தேர்வு எழுதி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை, தமிழக அரசு வழங்கி உள்ளது. இதற்கான தனித்தேர்வு, ஜூலை மாதம் நடக்கிறது. மாணவ, மாணவியர் அந்தந்த பள்ளிகளுக்கு சென்று, உரிய கட்டணத்தை செலுத்தி தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். இதற்கான கடைசி நாள் ஜூன், 1 ஆகும்.
அந்த வகையில், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 10ம் வகுப்பு படித்து அரசு பொதுத்தேர்விற்கு வருகை புரியாத மற்றும் தேர்ச்சி புரியாத மாணவர்களுக்கு, 'தொடர்ந்து கற்போம்' என்ற திட்டம் மூலம் சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. மாவட்ட உதவி திட்ட அலுவலர் மனோகரன், சிறப்பு பயிற்சி வகுப்பை துவக்கி வைத்தார்.

