/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
புகையிலை பொருட்களை விற்ற 12 கடைகளுக்கு சீல்
/
புகையிலை பொருட்களை விற்ற 12 கடைகளுக்கு சீல்
ADDED : ஜூன் 28, 2024 02:04 AM
சேந்தமங்கலம்சேந்தமங்கலம் தாலுகாவில், உணவு பாதுகாப்பு துறையினர் செய்த சோதனையில், புகையிலை பொருட்களை விற்ற, 12 கடைகளுக்கு சீல் வைத்து, 3.50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
சேந்தமங்கலம் தாலுகாவில் எருமப்பட்டி, பேளுக்குறிச்சி மற்றும் மோகனுார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களில், உணவு பாதுகாப்பு துறை அலுவலர் மற்றும் போலீசார், உள்ளாட்சி பிரதிநிதிகள் இணைந்து, புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் ரெட்டிபட்டி, சேந்தமங்கலம், பேளுக்குறிச்சி, பொன்னேரி ஆகிய பகுதிகளில் உள்ள 12 பெட்டி கடைகள் மற்றும் மளிகை கடைகளில், புகையிலை பொருட்களை மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, 12 கடைகளுக்கு சீல் வைத்த உணவு பாதுகாப்பு துறையினர் அபராதமாக, 3.50 லட்சம் ரூபாய் விதித்துள்ளனர்.