ADDED : பிப் 15, 2025 01:55 AM
அ நிறம் | அளவு
ரூ.1.50 லட்சத்திற்குகொப்பரை வர்த்தகம்
மல்லசமுத்திரம்:மல்லசமுத்திரம் டி.சி.எம்.எஸ்.,சில், நேற்று கொப்பரை தேங்காய் ஏலம் நடந்தது. இதில், சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த
விவசாயிகள், 60 கிலோ எடையுள்ள, 32 மூட்டை கொப்பரை தேங்காயை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.இதில், முதல் தரம் கிலோ, 128.10 ரூபாய் முதல், 140.80 ரூபாய்; இரண்டாம் தரம், 98.80 ரூபாய் முதல், 108.90 ரூபாய் என, மொத்தம், 1.50 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகமானது. அடுத்த ஏலம் வரும், 21ல் நடக்கிறது.
