/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல் 5 மாதத்தில் 146 வழக்கில் 150 பேர் கைது
/
மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல் 5 மாதத்தில் 146 வழக்கில் 150 பேர் கைது
மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல் 5 மாதத்தில் 146 வழக்கில் 150 பேர் கைது
மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல் 5 மாதத்தில் 146 வழக்கில் 150 பேர் கைது
ADDED : மே 30, 2024 01:16 AM
நாமக்கல், 'ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக, நாமக்கல் மாவட்டத்தில், 5 மாதங்களில், 146 வழக்கு பதிந்து, 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்' என, குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்டத்தில், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணன், எஸ்.ஐ., ஆறுமுகநயினார் தலைமையிலான போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் மட்டும், 5 மாதங்களில், ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கி வைத்திருத்தல் தொடர்பாக, 146 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் சம்பந்தப்பட்ட, 150 குற்றவாளிகள் கைது செய்தும், அவர்களிடம் இருந்து, 36 டன் ரேஷன் அரிசி மற்றும் 17 காஸ் சிலிண்டர் கைப்பற்றியும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட, 31 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக, 21 வழக்குகளில் சம்பந்தப்பட்ட, 28 பேருக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்றுத்தரப்பட்டுள்ளது. ஏற்கனவே ரேஷன் அரிசி கடத்தல் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட, 29 வாகனங்களின் உரிமையாளர்கள் மீது, நாமக்கல் டி.ஆர்.ஓ., மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு, 12 லட்சத்து, 13,127 ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக, நாமக்கல் மாவட்டத்தில், ரேஷன் அரிசியை கோழி பண்ணைகளுக்கு தீவனமாக பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, ஐந்து மாதங்களில், 3 கோழிப்பண்ணை உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ரேஷன் அரிசியை மாட்டு தீவனமாக அரைத்து வழங்கும் மாவு மில் உரிமையாளர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.