/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
16 சிறந்த ஆசிரியர்களுக்கு அமைச்சர் விருது வழங்கல்
/
16 சிறந்த ஆசிரியர்களுக்கு அமைச்சர் விருது வழங்கல்
ADDED : மார் 09, 2025 02:06 AM
திருச்செங்கோடு:திருச்செங்கோடு, கே.எஸ்.ஆர்., கலை அறிவியல் கல்லுாரி, தமிழ்நாடு முன்பருவ கல்வி ஆசிரியர்கள் சங்கம், கல்வியாளர் சங்கம் இணைந்து, உலக மகளிர் தின விழா மற் றும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழாவை நேற்று நடத்தின. கே.எஸ்.ஆர்., கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவர் சச்சின் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் கார்த்தி அனைவரையும் வரவேற்றார். 16 சிறந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கி, தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பேசியதாவது: பெண்கள் வளர வேண்டுமென்றால், கல்வி, பொருளாதார சுதந்திரம் கொடுத்தால் போதுமானது என, கூறியவர் ஈ.வெ.ரா., அதை செயல்படுத்தியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. 1929ல் செங்கல்பட்டு மாநாட்டில், பெண்களுக்கு சொத்துரிமை வழங்க வேண்டும் என, ஈ.வெ.ரா., கேட்டதை நடைமுறைப்படுத்தி, 1989ல் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்க சட்டம் இயற்றியவர் கருணாநிதி. இவ்வாறு பேசினார்.
கல்லுாரி அட்மின் இயக்குனர் மோகன், மேற்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி, திருச்செங்கோடு நகர செயலாளர் கார்த்திகேயன், ஒன்றிய செயலாளர் தங்கவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.