/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரூ.1.64 கோடியில் சாலைப்பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
/
ரூ.1.64 கோடியில் சாலைப்பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ரூ.1.64 கோடியில் சாலைப்பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ரூ.1.64 கோடியில் சாலைப்பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : ஆக 27, 2024 03:18 AM
மோகனுார்: மோகனுார் ஒன்றிய பகுதிகளில், முதல்வரின் கிராமசாலை மேம்பாட்டு திட்டத்தில், ஊரக வளர்ச்சி துறை மூலம், ஆரியூர் பஞ்., நெய்க்காரன்பட்டியிலிருந்து, சுகர்மில் -தோளூர் சாலை வழி ஆலாம்பள்ளம், 1.660 கி.மீ., ஒருவந்துார் பஞ்., கணபதிபாளையம் -- ஒருவந்துார் செல்லும் சாலை, 0.750 கி.மீ., பரளி பஞ்., கங்காணிபட்டி செல்லும் சாலை, 0.790 கி.மீ., குமரிபாளையம் பஞ்., சங்கரம்பாளையம் -- ஓடப்பாளையம் சாலை, 0.910 கி.மீ., ஆகிய நான்கு பஞ்.,களில், ஒரு கோடியே, 64 லட்சத்து, 49,000 ரூபாய் மதிப்பில், புதிய தார்ச்சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது.
மோகனுார் ஒன்றிய குழுத்தலைவர் சரஸ்வதி தலைமை வகித்தார். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் நவலடி, முன்னாள் பஞ்., தலைவர்கள் கைலாசம், ராஜாகண்ணன், பி.டி.ஓ., சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் எம்.எல்.ஏ., ராமலிங்கம் பங்கேற்று, ஆரியூர் நெய்க்காரன்பட்டி, பரளி கங்காணிப்பட்டி ஆகிய இடங்களில் பூமி பூஜை செய்து சாலைப்பணியை துவக்கி வைத்தார்.