/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
73 மையங்களில் குரூப்-2 போட்டித்தேர்வு பங்கேற்பு 17,283; ஆப்சென்ட் 4,994 பேர்
/
73 மையங்களில் குரூப்-2 போட்டித்தேர்வு பங்கேற்பு 17,283; ஆப்சென்ட் 4,994 பேர்
73 மையங்களில் குரூப்-2 போட்டித்தேர்வு பங்கேற்பு 17,283; ஆப்சென்ட் 4,994 பேர்
73 மையங்களில் குரூப்-2 போட்டித்தேர்வு பங்கேற்பு 17,283; ஆப்சென்ட் 4,994 பேர்
ADDED : செப் 15, 2024 02:53 AM
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், 73 மையங்களில் நடந்த குரூப்-2 போட்டித்தேர்வில், 17,283 தேர்வர்கள் பங்கேற்றனர். 4,994 பேர் கலந்துகொள்ளவில்லை.
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம், குரூப்-2 போட்டித்தேர்வு, மாநிலம் முழுவதும், நேற்று நடந்தது. நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு தாலுகாவில், 73 மையங்களில் இத்தேர்வு நடந்தது. நாமக்கல் கலெக்டர் உமா தலைமையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்-வாணைய உறுப்பினர் சரவணக்குமார், தேர்வு மையங்களை ஆய்வு செய்தனர்.ராசிபுரம் ஆண்டகளூர்கேட், திருவள்ளுவர் அரசு கலைக்கல்-லுாரி, மசக்காளிப்பட்டி எஸ்.ஆர்.வி., ஹைடெக் மெட்ரிக் பள்ளி, திருச்செங்கோடு விவேகானந்தா கலை அறிவியல் கல்லுாரி, நாமக்கல் சி.எம்.எஸ்., பாலிடெக்னிக் கல்லுாரி, பொரசப்பா-ளையம் விநாயகா மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து, தேர்வு மையத்தில் கண் பார்வையற்ற மாற்றுத்திற-னாளி தேர்வர்களுக்கு, ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு தேர்வு எழுதி வருவதையும், கலெக்டர், தேர்வாணைய உறுப்பினர் ஆகியோர் பார்வையிட்டனர். நாமக்கல் தாலுகாவில், 35 தேர்வு மையங்களில், 10,742 தேர்வர்கள், ராசிபுரம் தாலுகாவில், 20 மையங்களில், 6,093 பேர், திருச்செங்கோடு தாலுகாவில், 18 மையங்களில், 5,442 பேர் என, மொத்தம், மாவட்டத்தில், 73 தேர்வு மையங்களில், 22,277 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்தி-ருந்தனர்.
அவர்களில், 17,283 தேர்வர்கள் மட்டுமே பங்கேற்றனர். 4,994 பேர் கலந்து கொள்ளவில்லை. இத்தேர்வு பணிகளில், 73 முதன்மை கண்காணிப்பாளர்கள், 3 கண்காணிப்பு குழுக்கள், 7 பறக்கும் படைகள், 21 நடமாடும் குழுக்கள், 73 ஆய்வு அலுவ-லர்கள், ஆயுதம் ஏந்திய, 73 போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.