ADDED : ஜன 30, 2025 01:47 AM
அ நிறம் | அளவு
ரூ.2 லட்சத்திற்குபருத்தி விற்பனை
மல்லசமுத்திரம்:மல்லசமுத்திரம் டி.சி.எம்.எஸ்.,சில் வாரந்தோறும் புதன்கிழமையன்று, பருத்தி ஏலம் நடக்கிறது. அதன்படி, நேற்று நடந்த பருத்தி ஏலத்தில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள், 60 கிலோ எடை கொண்ட, 90 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில், பி.டி., ரகம் குவிண்டால், 7,110 முதல், 8,220 ரூபாய், கொட்டு பருத்தி, 3,820 முதல், 4,980 ரூபாய் என, மொத்தம், 2 லட்சம் ரூபாய்க்கு ஏலம் நடந்தது. அடுத்த ஏலம் வரும், 5ல் நடக்கிறது.
