/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வாடகைக்கு பயன்படுத்திய 2 சொந்த கார்கள் பறிமுதல்
/
வாடகைக்கு பயன்படுத்திய 2 சொந்த கார்கள் பறிமுதல்
ADDED : ஆக 07, 2024 02:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம், -
வெப்படை பகுதியில் வாடகைக்கு பயன்படுத்திய, இரண்டு சொந்த கார்களை, குமாரபாளையம் போக்குவரத்து அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை பகுதியில், நேற்று மாலை, 6:00 மணிக்கு குமாரபாளையம் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சிவக்குமார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஈரோட்டை நோக்கி சென்ற, இரண்டு ஆம்னி காரை நிறுத்தி சோதனையிட்டார். அதில், இரண்டு கார்களும் சொந்த பயன்பாட்டுக்கானது என, தெரியவந்தது. இதையடுத்து, இரண்டு கார்களையும் பறிமுதல் செய்து, வெப்படை போலீசில் ஒப்படைத்தார்.