ADDED : மார் 25, 2024 01:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம்:குமாரபாளையம்
பகுதியில் அரசு அனுமதியின்றி மது விற்பதாக போலீசாருக்கு தகவல்
கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், எஸ்.ஐ., கெங்காதரன் உள்ளிட்ட
போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது, குமாரபாளையம்
அருகே, கல்லங்காட்டுவலசு, குப்பாண்டபாளையம் ஜே.ஜே., நகர்
பகுதியில் மது விற்பது தெரியவந்தது. நேரில் சென்ற போலீசார்
செல்வராஜ், 52, வீரன், 55, ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார்,
அவர்களிடமிருந்து விற்பனைக்கு வைத்திருந்த மது பாட்டில்களை
பறிமுதல் செய்தனர்.

