ADDED : ஜூன் 30, 2024 01:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம் குமாரபாளையத்தில், லாட்டரி விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
குமாரபாளையத்தில் போலி லாட்டரி விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது, பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள மீன் கடை ஒன்றில் போலி லாட்டரி விற்ற, அதே பகுதியை சேர்ந்த சரவணன், 45, ஜெகதீஸ்வரன், 42, ஆகிய இருவரை கைது செய்து, லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். இதில், தொடர்புடைய ரவி, 53, என்பவர் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.