/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சிறுவர்கள் ஓட்டிய 2 டூவீலர் பறிமுதல்
/
சிறுவர்கள் ஓட்டிய 2 டூவீலர் பறிமுதல்
ADDED : ஜூலை 26, 2024 03:12 AM
வெண்ணந்துார்: வெண்ணந்துார் சுற்றுவட்டார பகுதியில், சிறுவர்கள் ஓட்டி வந்த டூவீலர்களை மோட்டார் வாகன ஆய்வாளர் பறிமுதல் செய்து, போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தார்.
நாமக்கல் மாவட்டம், வெண்ணந்துார் சுற்றுவட்டார பகுதிகளில், பள்ளி மாணவர்கள் உரிமம் பெற தகுதியில்லாத நிலையில், டூவீ-லர்களை ஓட்டிச் செல்வதாக புகார்கள் உள்ளன. மேலும் இளை-ஞர்கள் பலர் வேகமாகவும். ஒரே இரு சக்கர வாகனத்தில் மூவர், நால்வர் சேர்ந்து செல்வதுமாக உள்ளது. சில நாட்களுக்கு முன்பு பரமத்தி வேலுார் பகுதியில், 14 வயது சிறுவர் இருவர் ஆம்னி வேன் ஒட்டிச்சென்று இயக்கிய நிலையில், விபத்து ஏற்பட்டு உயி-ரிழந்தனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்படி, தேற்று ராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் நித்யா வாகன சோதனை நடத்தினார். அப்போது, வெண்ணந்துார் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் பள்ளி மாணவர்கள் ஓட்டி வந்த டூவீலர்களை பறிமுதல் செய்து, போலீஸ் ஸ்டேஷனில் ஒப்ப-டைத்தார்.
இதையடுத்து பெற்றோர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களிடம், 18 வயதுக்கு குறைவான சிறுவர்கள் வாகனம் ஓட்டியதால், மோட்டார் வாகன சட்டம்-199 (ஏ) படி, தலா ரூ, 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

