/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கோழிப்பண்ணையில் தீ 2,700 கோழிகள் கருகின
/
கோழிப்பண்ணையில் தீ 2,700 கோழிகள் கருகின
ADDED : மே 16, 2024 02:12 AM
பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம் அருகே, கோழிப்பண்ணையில், மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில், 2,700 கோழிகள் தீயில் கருகி உயிரிழந்தன.
நாமக்கல் மாவட்டம், வெள்ளப்பாறை புதுார் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி, 40. இவர், வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில், மூன்று கோழிப்பண்ணைகள் அமைத்து, கோழிகளை வளர்த்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று காலை, 9:00 மணிக்கு, கோழிப்பண்ணையில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இந்த தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்ததால், பண்ணையில் வளர்த்து வந்த கோழிகள் தீயில் கருகி உயிரிழந்தன.
தகவலறிந்து வந்த வெப்படை மற்றும் குமாரபாளையம் தீயணைப்பு படை வீரர்கள், தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இதில், 2,700 கோழிகள் தீயில் கருகின. மேலும், கோழிப்பண்ணை ஷெட் முழுதும் எரிந்தது.
இதன் சேதமதிப்பு, 30 லட்சம் ரூபாயாகும். பள்ளிப்பாளையம் போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், மின் கசிவால் தீவிபத்து ஏற்பட்டது தெரியவந்தது.