/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
2ம் கட்ட இன்ஜி., கவுன்சிலிங் துவக்கம்
/
2ம் கட்ட இன்ஜி., கவுன்சிலிங் துவக்கம்
ADDED : ஆக 18, 2024 03:58 AM
நாமக்கல்: தமிழக இன்ஜினியரிங் கல்லுாரிகளில் உள்ள, 1.80 லட்சம் இடங்களை நிரப்ப, மூன்று கட்டங்களாக இணையவழி கலந்-தாய்வு நடத்தப்பட்டு வருகிறது
. இதன் முதல் சுற்று, கடந்த ஜூலையில் துவங்கி, கடந்த, 10ல் முடிந்தது. அதை தொடர்ந்து, இரண்டாம் கட்ட கவுன்சிலிங் துவங்கியது. நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலை கல்லுாரியில் அமைந்துள்ள உதவி மையத்தில், ஏராளமான மாணவ, மாணவியர் பங்கேற்று, தங்களது விருப்ப கல்லுாரிகளை தேர்வு செய்து, சேர்க்கை பெற்று வருகின்றனர்.அதன்படி, நேற்றும், அதிகளவில் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு, அங்குள்ள பேராசிரியர்கள் உதவி செய்தனர். தொடர்ந்து, மாணவர்கள் தங்கள் விருப்ப கல்லுாரியில் சேர்க்கை பெற்றுனர். 'இரண்டாம் கட்ட கவுன்சிலிங், வரும், 23 வரை நடக்கும் என்றும், மூன்றாம் கட்ட கவுன்சிலிங், வரும், 23ல் துவங்கி, செப்., 4ல் முடியும்' என, உதவி மைய பொறுப்பா-ளர்கள் தெரிவித்தனர்.

