/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
3ம் ஆண்டு புத்தக திருவிழா ரூ.45 லட்சத்திற்கு நுால்கள் விற்பனை
/
3ம் ஆண்டு புத்தக திருவிழா ரூ.45 லட்சத்திற்கு நுால்கள் விற்பனை
3ம் ஆண்டு புத்தக திருவிழா ரூ.45 லட்சத்திற்கு நுால்கள் விற்பனை
3ம் ஆண்டு புத்தக திருவிழா ரூ.45 லட்சத்திற்கு நுால்கள் விற்பனை
ADDED : பிப் 12, 2025 01:16 AM
3ம் ஆண்டு புத்தக திருவிழா ரூ.45 லட்சத்திற்கு நுால்கள் விற்பனை
நாமக்கல் : நாமக்கல் மாநகராட்சியில், பள்ளிக்கல்வித்துறை சார்பில், 3ம் ஆண்டு புத்தக திருவிழா, கடந்த, 1ல் தொடங்கி, நேற்று முன்தினம் நிறைவடைந்தது. அதன் நிறைவு விழாவில், கலெக்டர் உமா தலைமை வகித்து பேசியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில், 3ம் ஆண்டு, 'புத்தக திருவிழா' கடந்த, 1ல் தொடங்கி, 10 நாட்கள் நடந்தது. நம் மாவட்டத்தில், புத்தக திருவிழா சிறப்பாக நடக்க முனைப்புடன் பணியாற்றிய அனைத்து அரசுத்துறை அலுவலர்களுக்கும் வாழ்த்துக்கள். புத்தக வாசிப்பின் முக்கியத்துவத்தை இளைஞர்கள் உணர வேண்டும். 3ம் ஆண்டு
புத்தக திருவிழாவிற்கு, 9-ம் நாள் வரை, 48,000 பேர் வருகை தந்து, 30,000 புத்தகங்கள் வாங்கி சென்றனர். அதன் மூலம், 45 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யபட்டுள்ளது. இது மொபைல் போன் தவிர்க்க முடியாத காலத்தில் கூட புத்தகம் வாசிக்க அனைவரும் ஆர்வமுடன் உள்ளார்கள் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. இளைஞர்களிடம் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், அடுத்த ஆண்டும் புத்தக திருவிழா சிறப்பாக நடத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்.டி.ஓ., பார்த்திபன், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் முருகன், பூங்குழலி, அரசுத்துறை அலுவலர்கள்
உள்பட பலர் பங்கேற்றனர்.