/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
லாட்டரி விற்பனை3 பேருக்கு 'காப்பு'
/
லாட்டரி விற்பனை3 பேருக்கு 'காப்பு'
ADDED : ஏப் 10, 2025 01:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
லாட்டரி விற்பனை3 பேருக்கு 'காப்பு'
குமாரபாளையம்:குமாரபாளையத்தில், லாட்டரி சீட்டு விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையில் போலீசார், தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதில், பஸ் ஸ்டாண்ட், ஆனங்கூர் பிரிவு டீக்கடை ஆகிய பகுதிகளில், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்வது தெரியவந்தது.
நேற்று மதியம், 1:00 மணிக்கு நேரில் சென்ற போலீசார், லாட்டரி விற்ற சசிகுமார், 39, இளங்கோ, 47, சவுந்தரராஜன், 39, ஆகிய மூவரை கைது செய்து, லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.