/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சேந்தமங்கலம் அருகே நாய்கள் கடித்ததில் 3 ஆடு உயிரிழப்பு
/
சேந்தமங்கலம் அருகே நாய்கள் கடித்ததில் 3 ஆடு உயிரிழப்பு
சேந்தமங்கலம் அருகே நாய்கள் கடித்ததில் 3 ஆடு உயிரிழப்பு
சேந்தமங்கலம் அருகே நாய்கள் கடித்ததில் 3 ஆடு உயிரிழப்பு
ADDED : செப் 01, 2024 03:42 AM
சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அருகே, நாய்கள் கடித்து மூன்று ஆடுகள் உயிரிழந்தன.
சேந்தமங்கலம் யூனியன், தாண்டாக்கவுண்ட னுார் அருகே கணவாய்மேட்டை சேர்ந்தவர் விவசாயி வெங்கடாசலம், 57. இவர் நேற்று முன்தினம், ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்று விட்டு பின், இரவு தோட்டத்தில் கட்டி வைத்திருந்தார். அப்போது அங்கு வந்த வெறி நாய்கள், ஆட்டு தொழுவத்தில் கட்டி வைத்திருந்த மூன்று ஆடுகளையும், சேவல் ஒன்றையும் கடித்து குதறியுள்ளது. ஆடுகளை இறந்து கிடந்ததை பார்த்து வெங்கடாசலம் அதிர்ச்சியடைந்தார்.
தாண்டாக்கவுண்டனுார் பகுதியில், தொடர்ந்து ஆடுகளை கடித்து வரும் நாய்களை கட்டுப்படுத்த, கால்நடை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.