/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
3,000 பேர் சிலம்பம் சுற்றி போலியோ விழிப்புணர்வு
/
3,000 பேர் சிலம்பம் சுற்றி போலியோ விழிப்புணர்வு
ADDED : ஆக 27, 2024 04:31 AM

நாமக்கல்: நாமக்கல்லில் போலியோ விழிப்புணர்வுக்காக, 3,000 மாணவர்கள் சிலம்பம் சுற்றி, உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்.
நாமக்கல் மாவட்ட ரோட்டரி சங்கங்கள் சார்பில், போலியோ குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 3,000 மாணவர்கள் சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சி, நாமக்கல் புறவழிச்சாலை பொம்மைக்குட்டைமேடு அருகே நேற்று நடந்தது.
ரோட்டரி மாவட்ட கவர்னர் சிவக்குமார் தலைமை வகித்தார். நாமக்கல் எஸ்.பி., ராஜேஷ்கண்ணன் போட்டியை துவக்கி வைத்தார்.
அரசு, தனியார் பள்ளி களை சேர்ந்த, 3,000 மாணவ, மாணவியர், காலை, 8:30 மணிக்கு துவங்கி, 9:30 மணி வரை, தொடர்ந்து ஒரு மணி நேரம் சிலம்பம் சுழற்றினர்.
இதை 'ஜெட்லி' புக் ஆப் ரெக்கார்ட் நிறுவன அதிகாரிகள் பார்வையிட்டு, அங்கீகார சான்று வழங்கினர்.

