ADDED : நவ 09, 2024 01:26 AM
திருச்செங்கோடு, நவ. 9-
திருச்செங்கோடு அடுத்த குமரமங்கலம் அருகே, மண்டகபாளையத்தை சேர்ந்த செங்கோட்டையன், லட்சுமி தம்பதியர். இவர்களுக்கு சொந்தமான, 3 ஏக்கர் நிலத்தில் மா, கொய்யா, தேக்கு உள்ளிட்ட மரங்களை வளர்த்து வருகின்றனர். கடந்த அக்., 4ல் தோட்டத்தில் புகுந்த மர்ம நபர்கள், மரங்களை வெட்டியதோடு, பாதுகாப்பு வேலியை பிடுங்கி எறிந்துள்ளனர். இதுகுறித்து, செங்கோட்டையன், திருச்செங்கோடு போலீசில் புகாரளித்தார். விசாரணையில், வழித்தடம் தொடர்பாக, இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக மரங்களை வெட்டி, வேலியை சேதப்படுத்தியது தெரியவந்தது.
இது தொடர்பாக, சக்திநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த முத்துசாமி, 47, ஆம்னி வேன் டிரைவரான, டி.கைலாசம்பாளையத்தை சேர்ந்த நாராயணன், 46, மண்டகபாளையத்தை சேர்ந்த மரம் வெட்டும் தொழிலாளி தங்கதுரை, 50, இவரது மகன் பெயின்டர் பிரபாகரன், 27 ஆகிய, 4 பேரை போலீசார் கைது செய்தனர்.