/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தொழிலாளி கொலை வழக்கில் பெண் உள்பட 4 பேர் கைது
/
தொழிலாளி கொலை வழக்கில் பெண் உள்பட 4 பேர் கைது
ADDED : செப் 01, 2024 03:50 AM
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அருகே, போதையில் நடந்த தகராறில் தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில், பெண் உள்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
நாமகிரிப்பேட்டை அடுத்த பட்டணம் முனியப்பன்பாளையம், குச்சிக்காடு பகுதியை சேர்ந்தவர் ராமசாமி மகன் தமிழரசன், 50, கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் காலை, இவர் போதையில் இதே பகுதியை சேர்ந்த முத்துசாமி மகன் லோகநாதன், 49 என்ப-வரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால், மாலை லோக-நாதன் மற்றும் உறவினர்கள் மூன்று பேர் தமிழரசனிடம் நேரில் சென்று பேசியுள்ளனர். அப்போது ஏற்பட்ட வாய் தகராறு கை கலப்பாக மாறியது. இதில் லோகநாதன் மற்றும் உறவினர்கள் தமி-ழரசனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், பலத்த காயம-டைந்த தமிழரசனை அக்கம் பக்கத்தினர் மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பல-னின்றி தமிழரசன் இறந்தார்.நாமகிரிப்பேட்டை போலீசார் விசாரித்து, இதே பகுதியை சேர்ந்த லோகநாதன், 49, இவரது அண்ணன் மாணிக்கம், 55, மாணிக்கம் மகன் சங்கர், 33, சங்கரின் மனைவி இளவரசி, 30 ஆகியோர் தாக்கியதில்தான் தமிழரசன் இறந்தது தெரிந்தது. இதையடுத்து அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.