/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குமாரபாளையம் அருகே கோர விபத்து மரத்தில் கார் மோதி 4 வாலிபர்கள் பலி
/
குமாரபாளையம் அருகே கோர விபத்து மரத்தில் கார் மோதி 4 வாலிபர்கள் பலி
குமாரபாளையம் அருகே கோர விபத்து மரத்தில் கார் மோதி 4 வாலிபர்கள் பலி
குமாரபாளையம் அருகே கோர விபத்து மரத்தில் கார் மோதி 4 வாலிபர்கள் பலி
ADDED : ஏப் 05, 2024 11:20 PM

குமாரபாளையம்:நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே சீராம்பாளையத்தில், மாரியம்மன் கோவில் திருவிழா நடக்கிறது. நேற்று, மஞ்சள் நீராட்டு விழா நடந்தது.
இதில் கலந்து கொள்ள, பள்ளிப்பாளையம் அருகே, சின்னாகவுண்டம்பாளையத்தை சேர்ந்த தனசேகர், 29, என்பவரின், 'மாருதி ஸ்விப்ட்' காரில், நண்பர்கள், நான்கு பேர் சீராம்பாளையம் சென்றனர். அதில், சீராம்பாளையம் லோகேஷ், 26, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கவின், 22, சிவக்குமார், 23, ஸ்ரீதர், 17, ஆகியோர் இருந்தனர். தனசேகர், காரை ஓட்டினார்.
குப்பாண்டம்பாளையம் மின் வாரிய அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த பனை மரத்தில் அதிவேகமாக மோதியது. இதில், கார் நசுங்கி உருக்குலைந்தது.
டிரைவர் தனசேகர், லோகேஷ், கவின், சிவக்குமார் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஸ்ரீதர் படுகாயமடைந்து, ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
டி.எஸ்.பி., இமயவரம்பன் தலைமையிலான, குமாரபாளையம் போலீசார், உடல்களை மீட்டு விசாரிக்கின்றனர்.
திருவிழாவுக்கு வந்த வாலிபர்கள் விபத்தில் உயிரிழந்த சம்பவம், சீராம்பாளையம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

